×

கொள்ளிடம் அருகே அரிய வகை இனமான 2000 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டு குஞ்சு பொறித்த பின் அவை கடலில் விடப்படும், அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும். கடற்கரை பகுதிக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும்,இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 2000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று அனைத்து குஞ்சுகளும் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது.அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.சுமார் 2000 ஆமை குஞ்சுகளும் கடலில் விடுபட்ட நாளிலிருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற் பகுதிக்கு வரும் என்று சீர்காழி வனசரகர் ஜோசப்டேனியல் தெரிவித்தார்….

The post கொள்ளிடம் அருகே அரிய வகை இனமான 2000 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Kollid ,Kollidam ,Koogiyar village ,Kollidam, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்